ஜே.பி. நட்டா யாரு? அவருக்கு நான் ஏன் பதில் சொல்லணும்.. பா.ஜ.க. தலைவருக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..

ஜே.பி. நட்டா யாரு? அவருக்கு நான் ஏன் பதில் சொல்லணும்.. பா.ஜ.க. தலைவருக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..

ஜே.பி.நட்டா யாரு, அவருக்கு நான் ஏன் பதில் சொல்லணும் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவருக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், ராகுல் காந்தியும், அவரது வம்சமும், காங்கிரசும் சீனா தொடர்பாக பொய் சொல்வதை எப்போது நிறுத்துவார்கள்? அவர் குறிப்பிடும் அருணாச்சல பிரதேசம் உள்பட ஆயிரக்கணக்கான கி.மீ. தூரத்தை சீனர்களுக்கு பண்டிட் நேரு தவிர வேறு யாரும் பரிசளிக்கவில்லை என்பதை அவர் மறுக்க முடியுமா? மீண்டும் மீண்டும் காங்கிரஸ் ஏன் சீனாவிடம் சரணடைகிறது?. மேலும், காங்கிரஸ் அரசாங்கத்தின்கீழ் விவசாயிகள் ஏன் பல தசாப்தங்களாக ஏழைகளாக இருந்தனர்? எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும் விவசாயிகளிடம் அவர் அனுதாபம் கொள்கிறார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு இந்த கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் சொல்வார் என்று நம்புகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

ஜே.பி. நட்டா யாரு? அவருக்கு நான் ஏன் பதில் சொல்லணும்.. பா.ஜ.க. தலைவருக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..
ஜே.பி. நட்டா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அவர் யார், நான் அவருக்கு பதிலளிக்க வேண்டும்? அவர் என் பேராசிரியரா? நான் நாட்டுக்கு பதிலளிப்பேன். விவசாயிகளுக்கு உண்மை தெரியும். ராகுல் காந்தி என்ன செய்தார் என்று அனைத்து விவசாயிகளுக்கும் தெரியும். நட்டா ஜி பட்டா பார்சலில் இல்லை. எனக்கு ஒரு குணம் இருக்கிறது. நான் நரேந்திர மோடியையோ அல்லது யாரையோ பார்த்து பயப்படவில்லை.

ஜே.பி. நட்டா யாரு? அவருக்கு நான் ஏன் பதில் சொல்லணும்.. பா.ஜ.க. தலைவருக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..
பிரதமர் மோடி

அவர்களால் என்னை தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும். நான் ஒரு தேசபக்தர். எனது நாட்டை பாதுகாப்பேன். இது எனது தர்மம். நான் அவர்களை காட்டிலும் வெறி பிடித்தவன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2011ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம் பட்டா பார்சாலில் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராடினர். அந்த போராட்டத்தில்தான் ராகுல் காந்தி முதல் முறையாக விவசாயிகளுடன் இணைந்தார்.