மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மக்களுக்கு மழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை.. கமல் நாத்.

 

மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மக்களுக்கு மழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை.. கமல் நாத்.

மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மழை குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கமல் நாத் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குவாலியர், சிவ்புரி மற்றும் தாதியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பகுதிகளில் மீட்பு பணிகள், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மற்றும் கால்நடைகளின் உயிரை காக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு மழை குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மக்களுக்கு மழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை.. கமல் நாத்.
கமல் நாத்

மத்திய பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் கமல் நாத் இது தொடர்பாக கூறுகையில், சும்மா படம் காட்டுவதால் எந்த பலனும் இல்லை. வெள்ள மேலாண்மையின் நேரம் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்த விவரங்களை அளிக்க முன்வருமாறு முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அக்கறைப்படவில்லை. வானிலை ஆய்வு மையம் மழை குறித்த விவரங்களை முன்கூட்டியே அறிவிக்கிறது. அரசாங்கம் அனைவரையும் எச்சரித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மக்களுக்கு மழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை.. கமல் நாத்.
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

கமல் நாத்தின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், அவர்கள் டிவிட் செய்து கொண்டே இருக்கிறார்கள். கமல்நாத் முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சர்கள் ஒரு வாரமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை. நான் போராட்டம் நடத்திய பிறகு அவர்கள் சென்றனர். இது மோசமான அரசியல். பிரதமர் கரீப் கல்யாண் அன்னா திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 கிலோ ரேஷன் பொருட்களை மத்திய பிரதேச அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.