பெல்லாரி சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்

பெல்லாரி சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் உடலை உறவினர்களிடம் வழங்குவது இல்லை. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசே அடக்கம் செய்கிறது. அடக்கம் செய்ய எடுத்தும் உடல்களை, தூக்கி வீசுவது, இழுத்து செல்வது என சில ஊழியர்கள் அலட்சியமாக கையாளுகின்றனர். அது மாதிரி ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

பெல்லாரி சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் உடலை பணியாளர்கள் குழிக்குள் தூக்கி எறிந்து அடக்கம் செய்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியதாவது:

பெல்லாரி சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… காங்கிரஸ்

பெல்லாரி சம்பவத்தை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை கையாண்டவிதம் துரதிருஷ்டவசமானது. நாடு முழுவதும் அதற்கு சாட்சி. தேசத்திடம் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தனது மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களுக்காக இந்தியா அறியப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.