அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடி மீது விசாரணை நடத்த வேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை

 

அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடி மீது விசாரணை நடத்த வேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை

பெகாசஸ் விவகாரத்தில், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் (ஞாயிறு) சர்வதேச ஊடக கூட்டமைப்பு ஒன்று, இந்தியாவில் 2 மத்திய அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸ் மூலம் ஹேக்கிங் செய்ய இலக்கு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடி மீது விசாரணை நடத்த வேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை
மல்லிகார்ஜூன் கார்கே

இஸ்ரேல் நிறுவனம் இந்த சாப்ட்வேரை அரசு அமைப்புகளுக்கு மட்டுமே விற்பனை செய்கிறது. இதனால் ஹேக்கிங் செய்தியை குறிப்பிட்டு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை வேவு பார்ப்பதில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர்.

அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடி மீது விசாரணை நடத்த வேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

இது தொடர்பாக ஜே.பி.சி. விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன், அமித் ஷா சஹாப் ராஜினாமா செய்ய வேண்டும். மோடி சஹாப் மீது விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பிரதமர் மோடி தான் டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதாக கூறுகிறார். ஆனால் இன்று நாங்கள் அதை கண்காணிப்பு இந்தியா என்று பார்க்கிறோம். என்.எஸ்.ஓ. (இஸ்ரேல் நிறுவனம்) தனது தயாரிப்புகள் குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கத்தால் பிரத்தியேகமாகப் படுத்துகின்றது என்று கூறுகிறது. ஆனால் அவை மோடிக்கு எதிராக பேசும் மக்களுக்கு எதிராக பெகாசஸை பயன்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.