மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணியா?

 

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் மு.க ஸ்டாலினுக்கு இது மிக முக்கியமான தேர்தல். அதே போல தான் அதிமுகவுக்கும். தேர்தலில் மீண்டும் தோல்வியை சந்திக்காமல் இருக்க கோடிக் கோடியாக கொட்டிக் கொடுத்து ஐபேக்கை களமிறக்கியிருக்கிறது திமுக. ஐபேக் பரிந்துரையின் பேரிலேயே அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தொகுதி பங்கீடும் தான்.

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணியா?

ஐபேக் பரிந்துரையின் பேரில் திமுக செயல்படுவதால், இதுவரை இல்லாத அளவுக்கு திமுக கறார் கட்டுவதாக கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. காங்கிரஸுக்கும் அதே நிலை தான். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு 20க்கும் குறைவான தொகுதிகளையே கொடுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணியா?

இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக 30 தொகுதிகளுக்கு குறைவாக கொடுத்தால் கூட்டணியை விட்டு விலகுமாறு சில மாவட்ட நிர்வாகிகள் கூறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. 30 தொகுதிக்கு மேல் கொடுத்தால் கூட்டணியை தொடரலாம் என்றும் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாக தெரிகிறது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.