6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.20 லட்சம் கோடி வசூல்… மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

 

6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.20 லட்சம் கோடி வசூல்… மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி வாயிலாக மட்டும் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி வசூல் செய்துள்ளதாகவும், டீசல் விலை 820 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டில் கடந்த பல நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.20 லட்சம் கோடி வசூல்… மத்திய அரசை சாடிய காங்கிரஸ்
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் ஹோரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.23.78ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.28.37ம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது உற்பத்தி வரியை அதிகரித்து சாமானிய மக்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கோடியை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு கொள்ளையடித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட உற்பத்தி வரியை குறைத்தாலே பெட்ரோல் லிட்டர் ரூ.61.92ஆகவும், டீசல் லிட்டர் ரூ.47.51ஆகவும் குறைந்து விடும்.

6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.20 லட்சம் கோடி வசூல்… மத்திய அரசை சாடிய காங்கிரஸ்
பிரதமர் மோடி

பெட்ரோல், டீசல் மீதான வரி வாயிலாக கிடைத்த ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு எந்த துறையிலாவது செலவு செய்ததை பார்க்கிறோமா, வேளாண் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, அரசு ஊழியர்கள் அல்லது ஏதேனும் துறையில் அரசு செலவிட்டுள்ளதா? இதற்கு என்ன அர்த்தம். அரசின் கவனக்குறைவு, ஒட்டு மொத்த தவறான நிர்வாகம் மற்றும் நிர்வாகமின்மையைத்தான் குறிக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் பணியாற்றும் இந்த அரசுக்காக, சாமானிய மக்கள் எதற்காக இந்த விலையை அளிக்க வேண்டும். நாட்டின் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விஷயங்களை கிளப்பி தங்களுடைய ஆட்சியின் மீதான கோபம், அச்சம் மற்றும் தோல்வி ஆகியவற்றிலிருந்து திசை திருப்பியே மத்திய அரசு வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.