’வெல்கம் டு த கிளப்’ 600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

’வெல்கம் டு த கிளப்’ 600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்கு உரிய பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முக்கியமான மைல்கல்லைக் கடந்துள்ளார்.

இதுவரை சுழற்பந்து வீச்சாளர்களே டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களையும் கடந்துள்ளனர். இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளையும் இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்கல் மூவருமே சுழற்பந்து வீச்சாளர்களே.

’வெல்கம் டு த கிளப்’ 600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

தற்போது 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளர். வேகப் பந்து வீச்சாளர் ஒருவர் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது உலகிலேயே முதன்முறை இது.

என்னுடைய இலக்கு 700 விக்கெட்டுகள் எனக்கூறி ஆச்சர்யப்பட வைக்கிறார் ஆண்டர்சன். அவருக்கு வாழ்த்துகளைப் பலரும் கூறி வருகின்றனர்.

அனில் கும்ப்ளே, ‘600 விக்கெட்டுகள் வீழ்த்தியமைக்கு வாழ்த்துகள் ஆண்டர்சன். வெல்கம் டு த கிளப். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இது பெரும் சாதனை’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

’இது பெருமைமிகுந்த தருணம்’ என்று சிலாகித்திருக்கிறார் ஷேன் வார்னே.

’வெல்கம் டு த கிளப்’ 600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

’தனித்துவமான உங்கள் சாதனைக்கு என் வாழ்த்துகள் ஆண்டர்சன். நான் எதிர்கொண்ட பவுலர்களில் நீங்கள் சிறந்த பவுலர்’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

’வளர்ந்துவரும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உங்களின் சாதனை புதிய நம்பிக்கையை அளிக்கும்’ என்று வாழ்த்தியிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரட் செளரவ் கங்குலி.

’வெல்கம் டு த கிளப்’ 600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்

இன்னும் பல கிரிக்கெட் ஜாம்புவான்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். தனது சாதனையோடு அணியும் தொடரை வென்றதால் டபுள் சந்தோஷத்தில் திளைக்கிறார் ஆண்டர்சன்.