நடிகர் விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

 

நடிகர் விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது.

நடிகர் விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது . முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு 24ஆம் தேதி முதல்வர் பதில் உரையாற்றுவார்.

நடிகர் விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

இந்நிலையில் மறைந்த எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. துளசி அய்யா வாண்டையார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ காளியண்ணனுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. இரங்கல் குறிப்பு தீர்மானத்திற்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதம் தொடங்குகிறது . கேள்வி – பதில் நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் உள்ளிட்டவை இல்லாமல் 24ஆம் தேதி வரை கூட்டத் தொடர்ந்து நடக்கிறது