50 பைசா ஊக்கத்தொகை வழங்கியதற்கு கண்டனம்: தஞ்சையில் நியாய விலை கடை பணியாளர்கள் நான்காவது கட்ட போராட்டம்

50 பைசா ஊக்கத்தொகை வழங்கியதற்கு கண்டனம்: தஞ்சையில்  நியாய விலை கடை பணியாளர்கள் நான்காவது கட்ட போராட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு ஏராளமான நியாய விலைக்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கதொகை மிகவும் குறைவானது, அநியாயமானது, இதை ஏற்கமுடியாது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும்.

50 பைசா ஊக்கத்தொகை வழங்கியதற்கு கண்டனம்: தஞ்சையில்  நியாய விலை கடை பணியாளர்கள் நான்காவது கட்ட போராட்டம்

மேலும் கொரோனா காலத்தில் பணியாற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்களை மருத்துவ குழு காப்பீட்டில் சேர்க்க வேண்டும். கோரோனோ தொற்றால் மரணமடைந்த ஊழியர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் 100% வழங்கவேண்டும்.

50 பைசா ஊக்கத்தொகை வழங்கியதற்கு கண்டனம்: தஞ்சையில்  நியாய விலை கடை பணியாளர்கள் நான்காவது கட்ட போராட்டம்

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்கவேண்டும். குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு இரட்டிப்பு சம்பளம் மே ஜூன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஊக்க தொகை உத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை அதனை உடனே வழங்க வேண்டும். காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் அடையாளங்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

50 பைசா ஊக்கத்தொகை வழங்கியதற்கு கண்டனம்: தஞ்சையில்  நியாய விலை கடை பணியாளர்கள் நான்காவது கட்ட போராட்டம்

இதற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை ஏற்றார். மற்றும் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, மதியழகன், சுப்பிரமணியன் , மகாலிங்கம் மற்றும் சகாய அமிர்தம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

50 பைசா ஊக்கத்தொகை வழங்கியதற்கு கண்டனம்: தஞ்சையில்  நியாய விலை கடை பணியாளர்கள் நான்காவது கட்ட போராட்டம்