‘பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை’ புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் பற்றி வாகன ஓட்டிகள் புகார்!

 

‘பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை’ புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் பற்றி வாகன ஓட்டிகள் புகார்!

நேற்று முதல்வர் திறந்து வைத்த பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்லாவரத்தில் சுமார் 82 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பல்வேறு முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் குரோம்பேட்டையில் இருந்து ஏர்போர்ட் வரை 1 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரே வழிப்பாதையாக இருக்கும் இந்த பாலத்தில் குறைகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

‘பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை’ புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் பற்றி வாகன ஓட்டிகள் புகார்!

அதாவது, கற்கள் பெயர்த்துக் கொண்டு வருவதாகவும் மேம்பாலம் சமதளமாக இல்லாமல் மேடும் பள்ளமாக இருப்பதாகவும் ஆங்காங்கே ஜல்லி மேலே நீட்டிக் கொண்டு இருப்பதாகவும் தார் சாலை போடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல, குரோம்பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கு ஒரே பாதையாக செல்வதால் விமான நிலையத்தில் இருந்து மேம்பாலம் வழியே வர முடியவில்லை என்றும் இதனை இருவழியாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது குறித்து பேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், குறைகள் சரிசெய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.