நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் புகார்

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் புகார்

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்ய வேண்டுமென்று காவல்துறை இயக்குனரிடம் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் அளித்திருக்கிறார். ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் புகார்

ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது அண்ணாத்த திரைப்படம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் 50 அடி உயரத்திற்கு இந்த போஸ்டரை அமைத்தனர். பின்னர் ஆடு ஒன்றை இழுத்து வந்து, பொதுவெளியில் பலநூறு பேர் முன்னிலையில் பட்டாக்கத்தியால் ஆட்டு தலையை வெட்டி உடல் கிடந்த துடிதுடிக்க அந்த உடலை தூக்கி அப்படியே அதிலிருந்து பீறிட்டு வந்த ரத்தத்தை போஸ்டரில் பீய்ச்சி அடித்தனர் ரசிகர்கள்.

வெறிபிடித்த இந்த ரசிகர்களின் செயல் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் அதிர வைத்தது. கண்டனங்கள் வலுத்து வந்தன.

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் புகார்

இந்த சம்பவத்திற்கு ரஜினிகாந்த் நிச்சயம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ரசிகர்கள் இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்று அவர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் . இல்லாவிட்டால் போஸ்டருக்கு போஸ்டர் ஒரு ஆட்டையும் மாட்டையும் இழுத்து வந்து வெட்டுவார்கள்.

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் புகார்

கர்நாடகத்தில் தான் இப்படி ரசிகர்கள் சுதீப் உள்ளிட்டவர்களுக்கு போஸ்டர் கட்டவுட்டுக்கு எருமை மாடுகளை வெட்டுகிறார்கள் என்றால் இங்கேயும் இப்படி செய்கிறார்களே. இதை ரஜினிகாந்த் வன்மையாக கண்டிக்க வேண்டும். அவர் இது குறித்து அறிக்கையை ரசிகர்களுக்கு வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் ரஜினி இது குறித்து எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் புகார்

இந்நிலையில் பொது இடத்தில் இப்படி பதைபதைக்கும் நிகழ்வை அரங்கேற்றிய ரசிகர்கள் மீது எந்தவித கண்டனத்தையும் பதிவு ரஜினிகாந்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்திருக்கிறார் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்