தேசியக் கொடி அவமரியாதை புகார்… எஸ்.வி.சேகரை விசாரிக்க போலீஸ் திட்டம்! – வழக்கு இப்போதைக்கு இல்லை

தேசியக் கொடி அவமரியாதை புகார்… எஸ்.வி.சேகரை விசாரிக்க போலீஸ் திட்டம்! – வழக்கு இப்போதைக்கு இல்லை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாகவும் தேசியக் கொடியை அவமரியாதை செய்தும் எஸ்வி.சேகர் பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

தேசியக் கொடி அவமரியாதை புகார்… எஸ்.வி.சேகரை விசாரிக்க போலீஸ் திட்டம்! – வழக்கு இப்போதைக்கு இல்லை
புதியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தை எதிர்த்து எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகவும், தேசியக் கொடியில் உள்ள நிறங்களை விமர்சித்தும் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சி.ராஜரத்தினம் புகார் கொடுத்திருந்தார். தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் எஸ்.வி.சேகர் பேசியதாக அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

தேசியக் கொடி அவமரியாதை புகார்… எஸ்.வி.சேகரை விசாரிக்க போலீஸ் திட்டம்! – வழக்கு இப்போதைக்கு இல்லை
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வது பற்றி சென்னை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை பெருநகர போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ராஜரத்தினம் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் முதலில் விசாரணை நடத்தப்படும். விரைவில் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்படும். ஆரம்பக் கட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.