‘கிசான் முறைகேடு’ சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி; புகார் எண்கள் அறிவிப்பு!

‘கிசான் முறைகேடு’ சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி; புகார் எண்கள் அறிவிப்பு!

கிசான் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க சிபிசிஐடி புகார் எண்களை அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.110 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேளாண்துறை உத்தரவிட்டது. அதன் படி கள்ளக்குறிச்சி, திருவாரூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்ட உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

‘கிசான் முறைகேடு’ சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி; புகார் எண்கள் அறிவிப்பு!

அதுமட்டுமில்லாமல், மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மாவட்ட ஆட்சியர்கள் பணத்தை திரும்பப்பெறும் முயற்சியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை அதிரடியாக கையில் எடுத்த சிபிசிஐடி, மோசடியில் ஈடுபட்ட பலரை கைது செய்துள்ளனர்.

‘கிசான் முறைகேடு’ சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி; புகார் எண்கள் அறிவிப்பு!

இந்த நிலையில், கிசான் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் தகவல் கொடுக்க சிபிசிஐடி புகார் எண்களை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 044-2851 3500, 2851 2510, 9498181035 ஆகிய எண்களிலும் cbcid2020@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தகவல் கொடுக்கலாம் என்றும் பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த முறைகேடு குறித்து சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.