திருச்சுழி தேர்தலுக்கு எதிராக புகார்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

 

திருச்சுழி தேர்தலுக்கு எதிராக புகார்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, கிராம மக்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்ததாக புகார் எழுந்தது. அவியூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அவர் சில்வர் பாத்திரங்களை கொடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் திருப்பதி புகாரளித்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

திருச்சுழி தேர்தலுக்கு எதிராக புகார்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த திருப்பதி, திமுக சார்பில் மக்களுக்கு பரிசு வழங்கப்பட்டதை புகைப்படத்துடன் நிரூபித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அங்கு வெறும் காகிதம் அளவிலேயே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தங்கம் தென்னரசை தகுதி நீக்கம் செய்வதோடு திருச்சுழி தேர்தலையும் ரத்து செய்ய வேண்டுமென அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

திருச்சுழி தேர்தலுக்கு எதிராக புகார்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

விசாரணையின் போது திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், திருச்சுழி தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தனர். அதே போல, திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்யக்கோரியதையும் நிராகரித்த நீதிபதிகள், அவர் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், ஆவணங்களை ஆணையத்திடம் வழங்கி மனுதாரர் நிவாரணம் பெறலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.