ராஜேந்திர பாலாஜியால் ரூ.4.20 கோடி இழப்பு- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்

 

ராஜேந்திர பாலாஜியால் ரூ.4.20 கோடி இழப்பு- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியால் திண்டுக்கல் ஆவின் பாலகத்திற்கு 4கோடியே 20லட்சம் இழப்பு ஏற்பட்டதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜியால் ரூ.4.20 கோடி இழப்பு- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், “திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் ஒன்றியத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 7 வழித்தடங்களில் பால் விற்பனை செய்ய ஏழு முகவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அப்போதைய அதிமுக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டின் காரணமாக கடந்த 13.02.20 தேதி முதல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஏழு முகவர்களும் நிறுத்தப்பட்டு ஒரு முகவருக்கு மட்டுமே 7 வழித்தடங்களிலும் பால் வினியோகம் செய்ய உரிமை வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 22 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டது. அந்த முகவருக்கு கொடைக்கானலில் பால் விற்பனை செய்ய லிட்டருக்கு 6 ரூபாய் 25 காசுகள் கமிஷன் வழங்கப்பட்டது. அதேபோன்று திண்டுக்கல், பழனியிலும் மோசடி நடைபெற்றது.

இதனால் நாள் ஒன்றுக்கு திண்டுக்கல் ஆவின் பால் பாலகத்திற்கு 40 ஆயிரம் வீதம் மாதத்திற்கு 12 லட்சமும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடியே 44 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக நான்கு கோடியே 32 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும், மீண்டும் பழைய ஒப்பந்தம் முறையே தொடங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.