கொரோனா புண்ணியத்தால் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ மாடலுக்கு மாறும் நிறுவனங்கள்….

 

கொரோனா புண்ணியத்தால் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ மாடலுக்கு மாறும் நிறுவனங்கள்….

கொரோனா வைரஸால் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் நிறுவனங்களின் பாரம்பரிய நடைமுறை முற்றிலும் புதிய இயல்வு நிலைக்கு மாறி வருகிறது. லாக்டவுனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது அலுவலக ரீதியான பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்தன. தற்போது லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகும் ஒர்க் ப்ரம் ஹோம் மாடலை தொடர்ந்து பின்பற்றவே நிறுவனங்கள் விரும்புகின்றன. மேலும் அதற்கான சூழலை ஏற்படுத்துவதிலும் மும்முரமாக உள்ளன.

கொரோனா புண்ணியத்தால் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ மாடலுக்கு மாறும் நிறுவனங்கள்….

உதாரணமாக, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மரிகோ, பாரம்பரியமாக செயல்பட்டு வரும் பணி அமைப்பில் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வர ஒரு வெளிப்புற ஆலோசகருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது அந்நிறுவனத்தின் அலுவலக அடிப்படையிலான பணியாளர்களில் 40 சதவீதம் பேரை ஒர்க் ப்ரம் ஹோம் (வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை) மாடலுக்கு மாற்றுவதை உறுதி செய்யும். விளம்பர நிறுவனமான வுண்டர் தாம்சன் 50:50 தீர்வை எதிர்பார்க்கிறது. இதனால் எந்த நாளிலும் அதன் அலுவலகத்தில் அதன் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள்.

கொரோனா புண்ணியத்தால் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ மாடலுக்கு மாறும் நிறுவனங்கள்….

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறது. வாரத்தின் 3 நாட்கள் மட்டும் அலுவலகத்தில் வேலை மற்றும் 2 நாட்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஸ்வெங்க் இது குறித்து கூறுகையில், கொரோனா வைரசுக்கு முந்தைய எச்.ஆர். கொள்கையில் ஒர்க் ப்ரம் ஹோமுக்கு ஒதுக்கீடு உள்ளது. ஆனால் மாதத்துக்கு அதிகபட்சம் 3 நாட்கள் என்ற உச்சவரம்பு உண்டு. ஆன்லைன் மற்றும் ஆப் லைன் கலந்துதான் புதிய இயல்பு. இது இரண்டும் கலந்தது. இது எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்று நான் ஈர்க்கப்பட்டேன். ஒர்க் ப்ரம் ஹோம் பணிகள் உண்மையில் நன்றாக உள்ளது மற்றும் நான் மிகவும் வசதியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.