தொகுதி பங்கீடு இழுபறி: இந்திய கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை!

 

தொகுதி பங்கீடு இழுபறி: இந்திய கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகையை சூட ஸ்கெட்ச் போட்டிருக்கும் திமுக, ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. திமுக அனைத்து செயல்பாடுகளும் தற்போது ஐபேக்கின் கையில் இருக்கிறது. போஸ்டர்கள் முதல் பிரச்சாரம் வரை எல்லாவற்றையும் ஐபேக் கண் கொத்தி பாம்பாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

தொகுதி பங்கீடு இழுபறி: இந்திய கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை!

ஐபேக்கின் அறிவுறுத்தலின் பேரில் தான் தொகுதி பங்கீடும் கூட நடைபெறுகிறது. கடந்த முறை தேர்தலின் போதெல்லாம் சுமுகமாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, இந்த முறை மிகவும் கறாராக நடைபெறுகிறதாம். முஸ்லீம் கட்சிகளுக்கு மொத்தமாக 5 தொகுதிகளை ஒதுக்கியிருக்கும் திமுக, விசிகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அதே 6 தொகுதிகளை கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று திமுக ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தொகுதி பங்கீடு இழுபறி: இந்திய கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை!

இந்த நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறி தொடர்பாக சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாக குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.