7.5% இட ஒதுக்கீடு: சான்றிதழ் சரிபார்க்க குழு அமைப்பு

 

7.5% இட ஒதுக்கீடு: சான்றிதழ் சரிபார்க்க குழு அமைப்பு

மருத்துவ படிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதனால் அவர்களின் கனவை நினைவாக்கும் பொருட்டு தமிழக அரசு, 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்களுக்கு மேல் ஆகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் நடப்பாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

7.5% இட ஒதுக்கீடு: சான்றிதழ் சரிபார்க்க குழு அமைப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலாகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க குழு அமைக்கப்படுகிறது. இதில் முறைகேடாக bonified சான்றிதழ் அளித்தால் அவரது எம்பிபிஎஸ் சீட் ரத்து செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.