கொரோனா முடிவுக்கு வர இத்தனை ஆண்டுகள் ஆகுமா – உலக சுகாதார நிறுவனம் தகவல்

 

கொரோனா முடிவுக்கு வர இத்தனை ஆண்டுகள் ஆகுமா – உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா நோய்த் தொற்று தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  இதுவே உலகை உலுக்கும் பிரச்னையாக மாறிவிட்டது. இந்தியாவில் தொடக்கத்தில் மாநகரங்கள், நகரங்களில் அதிக தொற்று இருந்த சூழல் மாறி, சின்னக் கிராமங்களிலும் தற்போது பரவல் அதிகரித்துவிட்டது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 31 லட்சத்து  17 ஆயிரத்து 813 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 12 நாட்களுக்குள் 31 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா முடிவுக்கு வர இத்தனை ஆண்டுகள் ஆகுமா – உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஷ் பேசுகையில், 1918 ஆம் ஆண்டு உலகில் உருவான ஸ்பானிஷ் ப்ளு தொற்றால் ஏராளமானவ்ர்கள் இறந்துபோனார்கள். ஸ்பானிஷ் ப்ளு முழுமையாக மறைய இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

தற்போது உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளில்  முடிவுக்கு வரும். முந்தைய வைரஸ் பரவலின்போது இந்தளவு தொழில்நுட்பம் இல்லை.  தற்போது அது பெருமளவில் வளர்ந்திருக்கிறது. மனிதர்களிடையே தொடர்புகள் அதிகரிப்பதாலும் வைரஸ் தொற்று அதிக்கரிப்பது உயர்ந்துவருகிறது’ என்று கூறியிருக்கிறார்.

கொரோனா முடிவுக்கு வர இத்தனை ஆண்டுகள் ஆகுமா – உலக சுகாதார நிறுவனம் தகவல்

ரஷ்யா தயாரித்துள்ள உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் வரும் என நம்புகின்றனர். அதுவே கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என நம்பும் ஒரே வழி.