கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு, நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்!

 

கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு, நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்!

கோவை

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் காட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் பேசிய அவர், நாளை முதல் கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், குறிப்பாக ஆனைக்கட்டி, வாலையாறு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட 6 முக்கிய சோதனை சாவடிகளில் காவல்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.

கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு, நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்!

அதேபோல், தமிழகத்தில் இருந்து கேரளா சென்று திரும்புபவர்கள் கட்டாயம் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த நடைமுறை வர்த்தக வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில் போக்குவரத்து மூலம் நோய் தொற்று பரவுவதை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஆட்சியர், தேர்தல் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.