ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா. அவர் காமெடியனாக இருந்தாலும் விரும்பதகாத சர்ச்சைகளில் சிக்குவது தற்போது சகஜமாகி வருகிறது. நேற்று அயோத்தியில் நடந்த ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா தொடர்பாக கருத்து கூறுகிறேன் என விமர்சனம் செய்து தற்போது புதிய சர்ச்சையை குணால் கம்ரா ஏற்படுத்தியுள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

குணால் கம்ரா தனது டிவிட்டரில், ஆச்சரியம் காஷ்மீரிகளுக்கு இன்று முழு இணைய அணுகல் வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் ஜனநாயகத்தின் மரணத்தை நேரடியாக பார்க்க முடியும் என பதிவு செய்து இருந்தார். குணால் கம்ரா இந்த பதிவுக்கு டிவிட்டர்வாசிகள் கடுமையான பதிலடி கொடுத்தனர். டிவிட்டர்வாசி ஒருவர், நாட்டின் உச்ச நீதிமன்றம் ஒருமனதாக வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்தின் மரணமா என பதில் கொடுத்து இருந்தார்.

ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

மற்றொரு டிவிட்டர்வாசி, 1. இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் அறிக்கையில் ஒரு தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. 2. இந்த தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதை விட ஜனநாயகமானது எதுவுமில்லை. என பதிவு செய்து இருந்தார். வேறொருவர், நீதிமன்றத்தின் உண்மையான அவமதிப்பு நடைமுறைக்கு வர வேண்டியது இங்குதான்.. என பதிவு செய்து இருந்தார்.