கொழும்பு கிங்ஸ் Vs காலி கிளாடியேட்டர்ஸ் – இலங்கை LPL தொடரில் இன்று செமி ஃபைனல்

கொழும்பு கிங்ஸ் Vs காலி கிளாடியேட்டர்ஸ் – இலங்கை LPL தொடரில் இன்று செமி ஃபைனல்

இலங்கையில் LPL போட்டிகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

கொழும்பு கிங்ஸ் Vs காலி கிளாடியேட்டர்ஸ் – இலங்கை LPL தொடரில் இன்று செமி ஃபைனல்

ஒவ்வொரு அணியும் எட்டுப்போட்டிகளி விளையாடி அதில் அதிக புள்ளிகள் எடுத்த நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ளன. மொத்த அணிகள் ஐந்துதான் என்பதால், கண்டி அணி மட்டும் வெளியேற்றப்பட்டு மற்ற அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.

இன்று ஒரு அரையிறுதிப் போட்டியும், இன்னொரு போட்டி நாளையும் நடைபெற உள்ளன. இதில் இன்றைய முதல் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியோடு மோதுகிறது காலி கிளாடியேட்டர்ஸ் அணி.

கொழும்பு கிங்ஸ் Vs காலி கிளாடியேட்டர்ஸ் – இலங்கை LPL தொடரில் இன்று செமி ஃபைனல்

இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். இதில் கொழும்பு அணி எட்டுப்போட்டிகளில் ஆறு போட்டிகளில் வென்றிருக்கிறது. எனவே இந்த அணியே பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி 2 போட்டிகளில் வென்று , 6-ல் தோற்று 4 புள்ளிகல் எடுத்து நான்காம் இடத்தில் உள்ளது. இதே நிலையில்தான் கண்டி அணி இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு காலி கிளாடியேட்டர்ஸ் தகுதிப் பெற்றிருக்கிறது

எனவே இன்றைய போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்பு கொழும்பு அணிக்கே இருப்பதாகக் கருதப்படுகிறது.