`ஆன்லைன் கேம் விளையாடினேன்; பணத்தை இழந்துவிட்டேன்!’- கல்லூரி மாணவர் எடுத்து விபரீத முடிவு

 

`ஆன்லைன் கேம் விளையாடினேன்; பணத்தை இழந்துவிட்டேன்!’- கல்லூரி மாணவர் எடுத்து விபரீத முடிவு

“தான் ஆன்லைன் கேம்கள் விளையாண்டேன். தன் சேமிப்பு பணத்தை அனைத்தையும் இழந்து விட்டேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார். இவர் காட்டாங்குளத்தூரரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரி விடுமுறை என்பதால், தனக்கு பிடித்த டாட்டூ போடும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிதிஷ்குமார், இன்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கடையின் உரிமையாளரை கேட்டுள்ளனர். நிதிஷ்குமாரின் வாகனம் கடையின் வாசலில் இருப்பதால் தொடர்ந்து கடையின் கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனையடுத்து மற்றொரு சாவியை வைத்து திறந்து பார்க்கும் பொழுது நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

`ஆன்லைன் கேம் விளையாடினேன்; பணத்தை இழந்துவிட்டேன்!’- கல்லூரி மாணவர் எடுத்து விபரீத முடிவு

அவரது கையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார். அதில், தான் ஆன்லைன் கேம்கள் விளையாண்டேன். தன் சேமிப்பு பணத்தை அனைத்தையும் இழந்து விட்டேன். ரம்மி சர்கிள், பப்ஜி, ஐபிஎல் போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடி தோற்றேன். இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்ற வெறியில் வேலை பார்த்த கடையில் உள்ள பணத்தை வைத்து கேஸ்ட்ரோ க்ளப் என்ற ஆன்லைனில் விளையாடினேன். அதிலும் தோற்ற காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்து கொள்வது தவறு எனவும், தனது பெற்றோர்கள், நண்பர்கள் காதலி ஆகியோர் எல்லோருக்கும் கடிதத்தில் மன்னிப்பு கேட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

`ஆன்லைன் கேம் விளையாடினேன்; பணத்தை இழந்துவிட்டேன்!’- கல்லூரி மாணவர் எடுத்து விபரீத முடிவு

இது தொடர்பாக அமைந்தகரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிதிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் இளைஞர்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இதனால், பலர் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதனை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.