அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

 

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள் தேர்வை எழுத முடியாத சூழல் நிலவியதால், நடந்து முடிந்த தேர்வுகளை தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் , இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமெஸ்டர் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை. இதனிடையே 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனால் வெகு நாட்களாக கிடப்பில் இருந்த, மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக தொடங்கிவிட்டது. அதே போல, அரசு கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

இந்த நிலையில் அரசு கல்லூரிகளில் இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள் விண்ணப்ப தரவுகளை சரிபார்ப்பது கல்லூரி முதல்வர், சேர்க்கை குழுவின் பொறுப்பு என்றும் மாணவர்களிடம் ஆவணங்களை பெற செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு, ஆன்லைன் வழியே பெற வேண்டும் என்றும் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளாரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தேவைப்பட்டால் கடந்த கல்வியாண்டு பின்பற்றியதை போல 20% கூடுதல் இடங்களுக்கு அரசின் ஒப்புதல் கோரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.