பொதுத்தேர்வுக்காக மாற்றுத்திறனாளி மாணவர்களை சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்!

பொதுத்தேர்வுக்காக மாற்றுத்திறனாளி மாணவர்களை சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை நடத்த அரசு சில அதிகாரிகளை நியமித்திருந்தது. இதனிடையே மீதமுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வுக்காக மாற்றுத்திறனாளி மாணவர்களை சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்!

தேர்வு நெருங்கி வருவதால் வெளியூரில் தங்கி இருக்கும் மாணவர்கள், தேர்வு எழுதும் ஊர்களுக்கு திரும்ப தொடங்கி விட்டனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை அவரவர் தேர்வு எழுதும் மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வெளியூரில் தங்கிப்படிக்கும் 10 மாணவ, மாணவியர்களை அவர்களின் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்த ஆட்சியர் பல்லவி பல்தேவ், அவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து தேர்வுக்கு வாழ்த்து கூறினார்.