தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு!

 

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு!

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெயதார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூயில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட உள்ளது.

இதனையொட்டி, கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் நேற்று, முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு!

அப்போது, வாக்கு எண்ணிக்கை தினத்தன்று தேர்தல் அலுவலர்கள், கட்சி முகவர்கள் உள்ளிட்டோர் வருவதற்கான பாதை, செய்தியாளர் சந்திப்பு மையம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றை விரைந்து அமைத்திடுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.