ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை… கோவை போலீசார் அதிரடி!

 

ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை… கோவை போலீசார் அதிரடி!

கோவை

கோவையில் அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு போலீசார், அதிரடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறன்றனர்.

அதன்படி, ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரித்தும், அபராதம் விதித்தும் வரும் போலீசார், சிலரது வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையராக நேற்று தீபக் தாமோர் பொறுப்பேற்றதை அடுத்து, போலீசார் வாகன சோதனையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை… கோவை போலீசார் அதிரடி!

இதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சங்கனூர் சந்திப்பு பகுதியில் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு, மாநகராட்சி நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொண்டு அனுப்பி வைத்தனர்.

கோவை காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் வெளியில் வராமல் முறையாக ஊரடங்கை கடைபிடிப்பர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.