“விநாயகருக்கு மாஸ்க், வெங்காய படையல்” – பார்வையாளர்களை கவரும் கொலு

 

“விநாயகருக்கு மாஸ்க், வெங்காய படையல்” – பார்வையாளர்களை கவரும் கொலு

கோவை

கோவை டிவிஎஸ் நகரில் உள்ள குடியிருப்பில் நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலுவில் கொரோனா ஒழிய வேண்டி விநாயகருக்கு மாஸ்க் அணிவித்தும், குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமான பொம்மைகள் இடம்பெற்றுள்ளது, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும், விவசாயத்தை குறிப்பிடும்

“விநாயகருக்கு மாஸ்க், வெங்காய படையல்” – பார்வையாளர்களை கவரும் கொலு

விதமான பொம்மைகளும், வெங்காயத்தின் விலை குறைந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்க வேண்டி கொலு பொம்மைகளுக்கு வெங்காயத்தை படையல் வைத்து வழிபாடு நடத்தியது பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ராவணன் தர்பார், மகாபாரத சட்டசபை, ராமாயண கதை, பண்டைய கால விவசாயம், கலை, பண்பாடு, தொழில்கள் குறித்து விளக்கும் கொலு பொம்மைகள் பார்ப்போர் மனதில் ஆச்சரியத்தை

“விநாயகருக்கு மாஸ்க், வெங்காய படையல்” – பார்வையாளர்களை கவரும் கொலு

ஏற்படுத்தியது. இந்த கொலுவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டு லட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடும் விதமாக பஜனை பாடல்கள் பாடினர். கொரோனா காரணமாக நண்பர்கள், உறவினர்கள் என யாரையும் சந்திக்க முடியாத நிலையில், இந்த நவராத்திரி விழாவின் 9 நாளிலும் சுற்றத்தார் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகழ்ச்சியினை அளித்துள்ளதாக கொலு அமைத்தவர்கள் தெரிவித்தனர்.