கோயம்பேடு பழக்கடை மார்க்கெட் திறப்பு!

 

கோயம்பேடு பழக்கடை மார்க்கெட் திறப்பு!

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள மொத்த பழக்கடை மார்க்கெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கோயம்பேடு பழக்கடை மார்க்கெட் திறப்பு!

கொரோனா நெருக்கடியால் 7 மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட மார்க்கெட்டில் 170 வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் செய்ய நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தனி நபர், சில்லரை வியாபாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பழக்கடை மார்க்கெட் திறப்பு!

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை கடந்த செப் 28 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் கொரோனா பரவல் குறைந்து இருந்த நிலையில் கோயம்பேடு சந்தை மூலமாகவே தொற்று வேகம் எடுக்க தொடங்கியது கவனிக்கத்தக்கது.