ஜெயலலிதா நினைவிடம் நோக்கி, கோவை மாவட்ட அதிமுகவினர் சைக்கிள் பேரணி…

 

ஜெயலலிதா நினைவிடம் நோக்கி, கோவை மாவட்ட அதிமுகவினர் சைக்கிள் பேரணி…

சேலம்

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க, கோவையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அதிமுகவினர் இன்று சேலம் வந்தடைந்தனர்.

சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, நாளை மறுதினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க கோவை மாவட்டம் அவிநாசியில் இருந்து அதிமுகவை சேர்ந்த 8 பேர் தீபம் ஏந்தி சைக்கிள் பேரணியை தொடங்கி, மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடம் நோக்கி, கோவை மாவட்ட அதிமுகவினர் சைக்கிள் பேரணி…

நேற்று முன்தினம் கோவை மாவட்டம் அவிநாசியில் பேரணியை தொடங்கிய அவர்கள், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் வழியாக பயணித்து இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரை வந்தடைந்தனர். அவர்களுக்கு, ஆத்தூர் நகர அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என வலியுறுத்தி தீபம் ஏந்தி சைக்கிள் பேரணி மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தனர். மேலும், நினைவிட திறப்பு நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் தீபத்தை வழங்க இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.