2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

 

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில் 23 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் துணை விமானி அகிலேஷ் உயிரிழந்த தகவல் அவரது மனைவிக்கு தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்த 32 வயதான அகிலேஷ் ஷர்மா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோவிந்த் நகரில் வசித்து வந்தார். அதே ஆண்டில் மேகா என்ற பெண்ணை மணந்த இவருக்கு, இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது. அகிலேஷ் ஷர்மாவிற்கு புவனேஷ் ஷர்மா, லோகேஷ் ஷர்மா என்ற 2 சகோதர்களும், திருமணமான ஒரு சகோதரியும் உள்ளனர். அவரது தந்தை துளசி ராம் ஷர்மா கோவிந்த் நகரில் சொந்த தொழில் செய்து வருகிறார்.

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

இந்த சூழலில் விபத்தில் அகிலேஷ் ஷர்மா உயிரிழந்தது குறித்து அவரது சகோதரர் லோகேஷ் ஷர்மா பேசினார். அப்போது “விமான விபத்துக்கு பிறகு எங்கள் அண்ணன் அகிலேஷ் கவலைக்கிடமாக முதலில் தெரிவித்தனர். பின்னர் இரவில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எனது மற்றொரு சகோதரர் புவனேஷ் கோழிக்கோட்டிற்கு சென்றுள்ளார். எங்கள் அண்ணிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. அதனால் அவரது கணவர் உயிரிழந்த செய்தியை நாங்கள் அண்ணியிடம் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.