தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை – ஏற்பாடுகள் தீவிரம்!

 

தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை – ஏற்பாடுகள் தீவிரம்!

தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு, வரும்13 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில், நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 13 ஆம் தேதி வருகை தர உள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகதில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை – ஏற்பாடுகள் தீவிரம்!

அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மக்களின் கனவாக இருந்த பல திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார். அவரது வருகை தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என தெரிவித்தார்.சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

தென் தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ள ரூ.23 கோடி மதிப்பிலான புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான கருவியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த சிகிச்சைக்காக ரூ.17 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த திட்டம் செயல்படும்போது, தென்மாவட்ட மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்ல வேண்டியது இல்லை எனவும் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை – ஏற்பாடுகள் தீவிரம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக வெளியூர் பயணம் செல்வதால், தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.