பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

 

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். ஆட்சிக்கு வந்த முதல் நாளே பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் மூலம் அந்தந்த துறைகளில் தனி கவனம் செலுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

எனினும், ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகியும் திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். திமுக அரசைக் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவும் திமுக தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்று. கடந்த 2012ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பத்திரிகையாளர்கள் மீது 90 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.