மத்திய பிரதேசத்தில் நாளை முதல் படிப்படியாக லாக்டவுன் தளர்வு.. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்

மத்திய பிரதேசத்தில் நாளை முதல் படிப்படியாக லாக்டவுன் தளர்வு.. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்

மத்திய பிரதேசத்தில் நாளை முதல் படிப்படியாக லாக்டவுன் தளர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஞாயிறு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்தது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. நாளையுடன் அம்மாநிலத்தில் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நாளை முதல் படிப்படியாக லாக்டவுன் தளர்வு.. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நிர்வாக படிநிலையின பல்வேறு மட்டங்களில் பணிபுரியும் நெருக்கடி மேலாண்மை குழுக்கள் மத்தியில் நேற்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் பேசுகையில் கூறியதாவது: ஜூன் 1 முதல் லாக்டவுனை தளர்த்தும் செயல்முறையை நாம் எதிர்நோக்க வேண்டும். தற்போது உள்ள கோவிட்-19 சூழ்நிலைகளை பொறுத்து மாவட்டங்கள் முடிவு எடுக்கும். கோவிட்-19ன் 3வது அலையை நாம் நிறுத்தலாம். மாநில அரசு சில வழிகாட்டுதல்களை அனுப்பும். ஆனால் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் நாளை முதல் படிப்படியாக லாக்டவுன் தளர்வு.. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்
ஊரடங்கு (கோப்புப்படம்)

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி மத்திய பிரதேசத்தில கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 2.1 சதவீதமாகவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 95 சதவீதமாக உள்ளது. தற்போது நம் நாட்டில் மத்திய பிரதேசமும், டெல்லியும் லாக்டவுனை தளர்த்தும் அளவுக்கு கொரோனா வைரஸை பரவலை வெற்றிக்கரமாக கட்டுப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.