நவராத்திரி காலத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும்… சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்

நவராத்திரி காலத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும்… சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்

மத்திய பிரதேசத்தில் நவராத்திரி காலத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் நவராத்திரி அல்லது துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி வரும் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நவராத்திரி விழா எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது.

நவராத்திரி காலத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும்… சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

ஆனால் மக்களின் மனநிலையை அறிந்த வடமாநில அரசுகள் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதேசமயம் கோவிட்-19 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. மத்திய பிரதேசத்தில் நவராத்திரி சமயத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

நவராத்திரி காலத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும்… சிவ்ராஜ் சிங் சவுகான் தகவல்
மத்திய பிரதேச கோயிலில் மக்கள் வெள்ளம் (கோப்புப்படம்)

இது தொடர்பாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நவராத்திரி சமயத்தில் அனைத்து துர்கா கோயில்களும் திறந்திருக்கும். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கோயில்களின் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து பக்தர்களும் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.