முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.399 கோடி குவிந்தது!

 

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.399 கோடி குவிந்தது!

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், அதிலிருந்து மக்களை காக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும் நிவாரண நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன்படி, பல்வேறு நிறுவனங்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், சிறுவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களால் முடிந்த தொகையை அளித்தனர். 

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.399 கோடி குவிந்தது!

இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அக்டோபர் 7 ஆம் தேதி வரை 399 கோடியே 93 லட்சத்து 3,366 ரூபாய் வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரணம் அளித்த அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.