வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி!

 

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி!

மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என் முதல்வர் செய்தியாளர்கள் சந்திபி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் கடந்த 20ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை கிடைக்காமல் போகும் என அச்சம் தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் கடும் எதிர்ப்புகளை மீறி 2 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி!

தமிழகத்தில் இந்த மசோதாக்களுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்கிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய முதல்வர், வேளாண் சட்டத்தாள் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இந்த புதிய சட்டம் விவசாயிகளை காக்கும் என்றும் நன்மை திட்டங்களுக்கு மட்டுமே அதிமுக அரசு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி!

தொடர்ந்து, விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காக்க இந்த புதிய சட்டம் உதவும் என கூறிய முதல்வர், விளைபொருட்களை பிற மாநிலங்களில் விற்க 8.5% வரியை பின்பற்றச் சொல்கிறாரா ஸ்டாலின் என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர்கட்சிகள் இந்த சட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், கொள்முதல் செய்பவர்கள் விவசாய நிலத்தில் உரிமை கொண்டாட முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.