அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் : முதல்வர் பழனிசாமி

 

அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நாளை மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் : முதல்வர் பழனிசாமி

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் குணமடைபவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும் என்றும் அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். அதே போல, மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்றும் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.