‘மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு பணி ஆய்வு’… இன்று திருச்சி செல்கிறார் முதல்வர்!

 

‘மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு பணி ஆய்வு’… இன்று திருச்சி செல்கிறார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதில் இருந்து மக்களைக் காக்கத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்தும் கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

‘மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு பணி ஆய்வு’… இன்று திருச்சி செல்கிறார் முதல்வர்!

அதன் படி நேற்று கோவைக்குச் சென்ற முதல்வர், கொரோனா தடுப்பு பணிகளைக் குறித்தும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து இன்று முதல்வர் திருச்சிக்கு செல்லவிருக்கிறார். இன்று காலை 10 மணிக்குத் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் அம்மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், முக்கொம்பு கதவனை கட்டும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.