எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு போடுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி காட்டம்

 

எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு போடுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி காட்டம்

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். இதேபோல் ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதுபோன்று தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு போடுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி காட்டம்

அதனைத்தொடர்ந்து நேற்று புதுச்சேரியை அடுத்த வில்லியனூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் மர்மநபர்கள் காவித்துணியை போர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் மன வேதனையை அளிப்பதாகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியது வருத்தத்தை தருகிறது என்றும் கூறினார்.

மேலும், கருத்து சுதந்திரம் என்ற பேரில் தரமற்ற விமர்சனத்தால் காயப்படுத்துவது மனித நாகரிகத்திற்கு மாறான செயல் என்றும் ஒருமைப்பாடு ஒற்றுமைக்கு குத்தகம் விளைவித்து ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுகின்றனர் என்றும் சிலையை அவமதித்தவர்கள் அவர்களை பின்னாலிருந்து இயக்கியவர்களை தோலுரித்து காட்ட வேண்டும் என்றும் கூறினார்.