நீட் தேர்வு கொண்டு வந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லையா? முதல்வர் கேள்வி

 

நீட் தேர்வு கொண்டு வந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லையா? முதல்வர் கேள்வி

நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கொண்டு வந்த போது திமுக கூட்டணியில் இருந்ததா? இல்லையா என முதல்வர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அவை இன்று காலை 10மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

நீட் தேர்வு கொண்டு வந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லையா? முதல்வர் கேள்வி

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என கூறிய அவர், கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட்டணியில் திமுக இருந்ததா? இல்லையா? என கேள்வி எழுப்பினார். இதனால் சட்டப்பேரவையில் அனல் பறக்கும் வாதங்கள் எழுந்து வருகின்றன.