விவசாயிகளை குழந்தை போல் அரசு பாதுகாக்கிறது : முதல்வர் பேச்சு!

 

விவசாயிகளை குழந்தை போல் அரசு பாதுகாக்கிறது : முதல்வர் பேச்சு!

விவசாயிகளை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரியில் விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘தமிழக விவசாயிகளை குழந்தை போல அரசு பாதுகாத்து வருகிறது. விவசாயிகளின் பாதுகாவலனாக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு பசுக்கள் போல 9.5 லிட்டர் பால் கறக்கும் கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுக்கும். படைப்புழுக்களை அழிக்க ரூ.45 கோடி வரை ஒதுக்கீடு செய்து அமெரிக்க படை புழுக்களை தடை செய்தோம்’ என்று கூறினார். மேலும், விவசாயிகளும் ரவுடிகளும் ஒன்றா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் ரவுடிகளோடு விவசாயிகளை ஒப்பிட்ட மு.க ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார்.

விவசாயிகளை குழந்தை போல் அரசு பாதுகாக்கிறது : முதல்வர் பேச்சு!

நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் அறிவித்த முதல்வர், அந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்தார். பாசன வசதியுடன் கூடிய அனைத்து நிலங்களுக்கும் வழக்கமாக வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையை விட, ரூ.10,000 உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வாறு விவசாயிகளின் நலனுக்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் முதல்வர், குழந்தை போல விவசாயிகளை பாதுகாப்பதாக தற்போது கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.