‘சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா’ – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

 

‘சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா’ – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா தான் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தை ஓபிஎஸ் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அதன் பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக முன்னோடிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

‘சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா’ – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் உரையைத் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர். பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர். அதிக நாட்கள் ஆட்சியில் இருந்து பெண் முதல்வர் என புகழாரம் சூட்டினார்.

மேலும், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தார் என்றும் சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என்றும் மக்களிடத்தில் தனி இடத்தை பிடித்தவர் என்றும் கூறினார்.