‘எனக்கு உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ்’ : பேரவையில் முதல்வர் உருக்கம்!

 

‘எனக்கு உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ்’ : பேரவையில் முதல்வர் உருக்கம்!

4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக இருந்ததாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

ஆளும் அதிமுக அரசின் ஆட்சிக் காலம் வருகின்ற மே 24ம் தேதியோடு நிறைவடைகிறது. தமிழகத்தின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பணிகள் ஒரு பக்கம் இருப்பினும், மறு பக்கம் சட்டப்பேரவை கூட்டத்தொடர், அரசு நிகழ்ச்சிகள் என பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

‘எனக்கு உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ்’ : பேரவையில் முதல்வர் உருக்கம்!

கடந்த 22ம் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தொடரின் போது வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புக்களை முதல்வர் வெளியிட்டார். இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள். சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகே, மீண்டும் சட்டப்பேரவை கூடும்.

‘எனக்கு உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ்’ : பேரவையில் முதல்வர் உருக்கம்!

இந்த நிலையில், பேரவையில் முதல்வராக பழனிசாமி தனது கடைசி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது ஆட்சி ஓரிரு மாதம் தான் இருக்கும் என்றனர். ஆனால் நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். எனக்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நன்றி. அரசுக்கு துணையாக இருந்த அமைச்சர்களுக்கும் நன்றி என உருக்கமாக பேசினார்.

மேலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம். வரும் சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம். நான் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வெற்றி நடைபோடும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே, சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.