தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது – முதல்வர் பழனிசாமி

 

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது – முதல்வர் பழனிசாமி

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஒவ்வொரு மாவட்டமாக சென்ற முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர், ரூ. 70 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது – முதல்வர் பழனிசாமி

இந்த நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள் வாயிலாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் ரூ.14 கோடி மதிப்பில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் ராமநாதபுரம் மக்கள் பயனடைவர் என்றும் தெரிவித்தார். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.