பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?.. ஈபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

 

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?.. ஈபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில், ‘ஒரு போதும் நான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்’ என அதிரடியாக பேசியிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அதிமுக பாஜக பக்கம் சாய்ந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?.. ஈபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி மோடி பக்கம் சென்று விட்டார் என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. இதையெல்லாம் பொருட்படுத்தாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திறம்பட 4 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து விட்டார். வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?.. ஈபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

இந்த நிலையில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில், அதிமுகவை வைத்து ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கிறது என சொல்வது முற்றிலும் தவறு. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி! அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா?. தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. சித்தாந்த அடிப்படையில் அல்ல. மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் மாநிலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அதிமுகவில் நான் பயணித்த காலம் கடினமான காலம் என உணர்ச்சிவசத்துடன் பேசிய முதல்வர், அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.