ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகளா? நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை!

 

ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகளா? நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரையில் தொடருகிறது. ஆரம்பக்கட்டத்தில் மக்கள் வீட்டை விட்டுக் கூட வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு விட்டன. தற்போது நாளொன்றுக்கு 1000 என்ற அளவில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகிறது. டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் டிச.31ம் தேதியோடு நிறைவடையவிருக்கும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அளிக்கப்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகளா? நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை!

இந்த நிலையில், ஊரடங்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி வரும் டிச.28ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.