நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து! கார், பைக்கில் செல்லவும் தடை- முதலமைச்சர்

நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து! கார், பைக்கில் செல்லவும் தடை- முதலமைச்சர்

ஊரடங்கு வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், ஜூன் 30 ஆம் தேதியோடு நிறைவடையும், காப்பீடு, கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து! கார், பைக்கில் செல்லவும் தடை- முதலமைச்சர்

சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 30 ஆம் வரை மாவட்டங்களுக்கு இடையே கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் துண்டிக்கப்படுகிறது. மாவட்டம்விட்டு மாவட்டம் செல்வது என்றால் இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம். மதுரையில் பொதுமுடக்கப் பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்” எனக்கூறினார்.