மேட்டூர் அணையில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை முதல்வர் நீர் திறக்க உத்தரவு!

மேட்டூர் அணையில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை முதல்வர் நீர் திறக்க உத்தரவு!

தமிழகத்தில் பெய்த கனமழையால் பல அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பவானிசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணை நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை முதல்வர் நீர் திறக்க உத்தரவு!

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையின் கிழக்குக்கரை மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நீர் திறப்பின் மூலம் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.