பாஜக இல.கணேசனுக்கு கிடைத்த முக்கிய பதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 

பாஜக இல.கணேசனுக்கு கிடைத்த முக்கிய பதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் ஆளுநரான கங்காதர பிரசாத் மணிப்பூர் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதனால் மணிப்பூருக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் நிலவியது. அந்தப் பதவிக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கனேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

பாஜக இல.கணேசனுக்கு கிடைத்த முக்கிய பதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழக பாஜக தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பியாக இருந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலினும் இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார். இல.கணேசனுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.